Tuesday, January 29, 2013

NFPE                                                                                                                                             NFPE

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவுகோவை கோட்டம், கோவை-641 001

 nfpecoimbatore.blogspot.in

                     கோட்டச்செய்திகள் - 1

அன்பார்ந்த தோழர்களே/தோழியர்களே!

வணக்கம்.  நமது கோட்ட்த்தின் 42வது கோட்ட மாநாடு கடந்த 19.01.2013 மற்றும் 20.01.2013 அன்று கோவை தலைமை அஞ்சலகத்தில் கோவை கோட்டத் தலைவர் தோழர் R. வேலுசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  19.01.2013 அன்று மாலை, ஈராண்டறிக்கையும், வரவு செலவு கணக்குகளும் முறையாக மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட்து.  20.01.2013 அன்று காலை 10 மணிக்கு தேசிய கொடியை தோழர் K.V.ராஜேந்திரன்  கோட்ட செயலர் R3 அவர்களும் சம்மேளன கொடியை தோழர் H.ஸ்ரீதரன் கோட்டசெயலர் P4 அவர்களும் ஏற்றி வைத்தார்.  கோட்டத் தலைவர் R. வேலுசாமி அவர்கள் உணர்ச்சிமிகு கோஷங்களை எழுப்பி அவையை சிறப்பாக நடத்திச் சென்றார்.  மேலும், கோவை கோட்டச் சங்கம் என்றும் ஊழியர் நலனுக்காக அயராது உழைக்கும் ‘தூங்கா சங்கம்’ என்ற கோஷத்தையும் எழுப்பினார்.

பின்னர் காலை 11 மணி அளவில் கோட்டசங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.  336 உறுப்பினர்கள் உள்ள நமது கோட்டத்தில் 314 உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். தேர்தலின் முடிவை நமது மாநில செயலர் J.இராமமூர்த்தி அவர்கள் பலத்த கரவொலிகளுக்கு இடையே அறிவித்தார்.  அதன் விவரம்:
தலைவர் R. வேலுசாமி, PA, கோவை HO     : 246/314
செயலர் D. எபினேசர் காந்தி, Accountant, R.S.புரம் HO : 248/314
பொருளாளர் A. வெங்கடேசன், PA, R.S.புரம் HO  : 244/314
தேர்தலுக்கு பின்னர் நடந்த நிர்வாகிகள் தேர்தலில்  12 கோட்டசங்க நிர்வாகிகளும், அகில இந்திய / மாறிய சார்பாளர்களும், ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.  பொது அரங்கில், நமது மாநில செயலர் தோழர் J.இராமமூர்த்தி அகில இந்திய துணை தலைவர் N. கோபாலகிருஷ்ணன் அகில இந்திய துணை பொது செயலர் தோழர் A. வீரமணி, கோவை மண்டல செயலர் N. சுப்பிரமணியன், திருப்பூர் தோழர் S. கருணாநிதி JCM உறுப்பினர், தோழர் S. பாஸ்கரன் A3 ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். விரிவான சுற்றறிக்கை பின்னர் வெளியிடப்படும்.

மண்டல PMG உடன் சந்திப்பு
22.01.2013 அன்று நமது மண்டல PMG உயர்திரு A.N.Nanda அவர்களை புதிய கோட்டச்சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.  பேட்டியின் போது, Reliance Gold Coin விற்பனை 200 கிராமுக்குக் குறைவாக உள்ள அலுவலகங்களுக்கும் Incentive வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  42வது கோவை கோட்டம் பற்றியும், ஊழியர்கள் பிர்ச்சினை பற்றியும் விவாதிக்கப்பட்ட்து.  நமது கோட்ட சங்க நிர்வாகிகளின் அணுகுமுறை பற்றியும், ஒத்துழைப்புப் பற்றியும் பாராட்டி பேசினார்.  பேட்டியின் போது, கோட்ட செயலருடம் தோழர் D. எபினேசர் காந்தி உடன் கீழ்க்கண்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

1.  தோழர் P. காளியப்பன் உதவித் தலைவர்
2.  தோழர் C. வனசின்னப்பன், உதவித் தலைவர்
3.  தோழர் A. வெங்கடேசன், நிதி செயலர்
4.  தோழர் L. சுரேஷ் பாபு, அமைப்பு செயலர்
5.  தோழர் M. கோவிந்தராஜன், உதவி செயலர்
6.  தோழர் A. சுரேஷ், செயற்குழு உறுப்பினர்

நமது மண்டல PMG உயர்திரு A.N. நந்தா அவர்கள் Himachal Pradesh Circle Chief PMG யாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  கோட்டச் சங்கத்தில் நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருநாள் வேலை நிறுத்தம்

மத்திய மாநில தொழிற்சங்கங்களும் இணைந்து வரும் 20.02.2013 மற்றும் 21.02.2013 இரு நாட்கள் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பு 22.01.2013 அன்று NFPE/FNPO சங்கங்கள் இணைந்து இலாக்கா முதல்வரிடம் வழங்கியுள்ளனர்.  பொதுவான மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை 7வது ஊதியக்குழு அமைத்தல் 50% சதவீத பஞ்சப்படியை ஊதியத்துடன் இணைத்தல், 5வது கட்ட பதவி உயர்வு, வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.  விரிவான சுற்ற்றிக்கை JCA சார்பாக பின்னர் வெளியிடப்படும்.
நமது அஞ்சல் மூன்று கோட்டச்சங்கதிற்கு என்று Blogspot ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  சங்க செய்திகளை தோழர்கள் / தோழியர்களை Website ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம். nfpecoimbatore.blogspot.in

பணிநிறைவு

நமது கோட்ட்த்தில் 41 வருடங்களாக பணிபுரிந்து தோழர் P. ஞானமணி துணை அஞ்சலக அதிகாரி கோவை மத்திய அஞ்சலகம் அவர்கள் கடந்த 17.01.2013 அன்று இலாக்காப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.  நமது NFPE கோட்ட சங்கத்தில் உதவி தலைவராகவும், பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றியுள்ளார்.  கோட்டச் சங்கம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சங்கத்திற்கு பெருமை சேர்த்தவர்.  கோட்டச் சங்கம் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது இலாக்காவில் கடந்த 40 வருடங்களாக பணிபுரிந்த தோழர் G.இராஜேந்திரன் SPM பீளமேடு கிழக்கு அவர்கள் வரும் 31.01.2013 அன்று இலாக்கா பணியை நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார்.  நமது NFPE சங்கம் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சங்கத்திற்கு வலுசேர்த்தவர்.  கோட்டச்சங்கம் நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமை மற்றும் போராட்ட வாழ்த்துக்களுடன்.

கோவை                                                                                                            தோழமையுடன்,

23.01.2013                                                                                                       D. எபினேசர் காந்தி
   கோட்டச் செயலர்